Blog

தூக்கம் - ஜன்ம ராசி படி

Date : 11th Jul 2016

Posted By : Admin

==
ராசிபடி  தூக்கம் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்....இது பொதுவன கருத்தே ..தங்கள் சுயஜாதகம் படி வேறு படும்..யார் மனதயும் புண்படுத்தும் நோக்கம் அல்ல..🙏👍🌸 1) மேச ராசிகாரர்கள் எல்லா வசதியும் கூடிய தனக்கு பிடித்த இடத்தில் தான் தூங்குவார்கள். இடமாறி படுத்தால் தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள். புரண்டு புரண்டு படுக்கும் பழக்கம் உள்ளவர்கள். சிலர் பாதி கண் திறந்தபடி தூங்குவார்கள். தூக்கத்தில் பேசும் பழக்கம் உள்ளவர்கள். பகலில் நடந்த விஷயங்களை இரவில் உறக்கத்தில் உளருவார்கள். பேசிக்கொண்டு இருக்கையில் தூங்கி விடுவார்கள்.

2) ரிசப ராசிகாரர்கள் சோறுகண்ட இடம் சொர்க்கம் தூக்கம் வந்த இடம் பஞ்சனை என எந்த இடத்திலும் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். அதிகமான கனவுகள் வந்து அது வாழ்வில் மெய்படும். ஒந்திரித்து தூங்கும் போது உருண்டு இடமாறி படுத்திருப்பார்கள். குரட்டைவிடும் பழக்கம் உள்ளவர்கள். கையை தலைக்கு வைத்து தூங்குவார்கள். அடிக்கடி தேர்வு எழுதுவது போன்ற கனவு வரும். தூக்கத்தில் சங்கீதம் கேட்பார்கள். பாடல் கேட்டுக்கொண்டோ டிவி பார்த்துக்கொண்டோ தூங்குவார்கள்.

3) மிதுனம் ராசிகாரர்கள் தூக்கதில்கூட தொழில் சிந்தனையுடன் தூங்குவார்கள். தொழில் முன்னேற்றத்தை பற்றி கனவு அதிகம் வரும். தான் பயன்படுத்தும் தலையனை, போர்வையை யாருக்கும் தரமாட்டார்கள். ஒந்திரித்து படுக்கும் பழக்கம் உள்ளவர்கள். படித்த விஷயங்களை கனவில் அசைபோடுவார்கள். புத்தகம் படித்தபடி தூங்கிவிடுவார்கள்.

4)கடகம் ராசிகாரர்கள் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சுத்தமான இடத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். கனவில் குரு, தெய்வ தரிசனம் செய்வார்கள். நிமிர்ந்தும், ஒந்தரித்தும், கவிழ்ந்தும் நிமிர்ந்தும் படுத்து குரட்டை விடும் பழக்கம் இருக்கும். விளையாட்டு, காதல், அறிவு சார்ந்த விஷயங்களை தூக்கத்தில்
ரசிப்பார்கள். ஒழுக்கமாக உடை கலையாமல் உறங்குவார்கள்.

5) சிம்ம ராசிகாரர்கள் பாதுகாப்பான இடத்தில் மட்டும் எப்போதும் ஒரு பய உணர்வுடன் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். அடிக்கடி தீய கனவுகள் கண்டு பதி தூக்கத்தில் எழும் பழக்கம் உள்ளவர்கள். குளிர்சியான இடத்தில் கவிழ்ந்து படித்தால் தான் தூக்கம் வரும். வாழ்வில், வழக்கில் வெற்றி பெறுதல் உயர்பதவி அடைதல் பேன்ற கனவுகள் அடிக்கடி வரும். தூக்கதில் உடை கலைந்தது கூட தெரியாமல் உறங்குவார்கள். 6) கன்னி ராசிகாரர்கள் துணையுடன் தூங்கும் பழக்கம் அல்லது தலையனையை கட்டிபிடித்துக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். கூட்டாளியை பற்றிய கனவு வரும். ஒந்திரித்து தூங்கும் போது அசயாமல் படித்திருப்பார்கள். சிலருக்கு திருமணத்துக்கு பிறகும் கூட திருமணம் சுபகாரியம் கொட்டுமேள சப்தம் அடிக்கடி கனவில் வரும். புத்தகம் படித்தபடி தூங்கிவிடுவார்கள்.

7) துலாம் ராசிகாரர்கள் குறைவாக தூக்கும் பழக்கம் உள்ளவர்கள். இவர்கள் அடிக்கடி தூக்கம் கெட்டால் எளிதில் நோய் வந்துவிடும். சிலர் தூக்கமாத்திரை போட்டு தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். ஒந்தரித்தும், கவிழ்ந்தும் நிமிர்ந்தும் படுத்து தூங்கும் பழக்கம் உள்ளவர். சிலர் கெட்ட கனவு கண்டு தூக்கதில் பயந்து எழுந்து கத்துவார்கள். தூக்கதில் உடை கலைந்தது கூட தெரியாமல் உறங்குவார்கள்.

8) விருச்சக ராசிகாரர்கள் விருப்பமான இடத்தில் படுத்து நல்ல ஆரோக்கியமான நீண்ட உறக்கம் செய்பவர்கள். மகிழ்சியான கனவுகள் (காதல் கனவுகள்) கண்பவர்கள். படுக்கையில் படுத்தவர் ஆடாமல் அசையாமல் படுத்து தூங்கும் பழக்கம் உள்ளவர். தூங்க போகும் முன் இறைவழிபாடு செய்யும் பழக்கம் உள்ளவர்கள். ஒழுக்கமாக் உடை கலையாமல் உறங்குவார்கள்.

9) தனுசு ராசிகாரர்கள் தனக்கு பிடித்த பஞ்சு மெத்தையில் சுகமாக தேவையான அளவு தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். தான் அடையா வேண்டிய வசதி வாய்ப்புகளை கனவாக் கண்பார்கள். கவிழ்ந்து உடல் முழுவதும் போர்வையால் போர்த்தியபடி தூங்கும் பழக்கம் உள்ளவர். கை கால்களை பரப்பிய படி கம்பீரமாக தூங்குவார்கள். பாடல் கேட்டுக்கொண்டோ டிவி பார்த்துக்கொண்டோ தூங்குவார்கள். 10) மகர ராசிகாரர்கள் எப்படிபட்ட இடமாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைபடாமல் தூங்குவார்கள். அவர் முயற்சியை தூண்டுவதுபோல் ஆக்கபூர்வமான கனவு கண்பர்கள். பாதிவிழிப்பு நிலையில் நிமிர்ந்தும், ஒந்தரித்தும், கவிழ்ந்தும் நிமிர்ந்தும் படுத்து குரட்டை விடும் பழக்கம் இருக்கும். தூக்கத்தின் மூலம் ஆரோக்கியத்தை பேனுவார்கள்.
டிவி பார்த்துக்கொண்டு தூங்குவார்கள்.

11) கும்ப ராசிகாரர்கள் நிம்மதியாக உணவருந்திய பின் உறங்கும் பழக்கம் உள்ளவர்கள். பணத்தை பற்றிய கனவுகள் அதிகம் கண்பார்கள். தூங்கும் போது காலை ஆட்டியபடியோ அல்லது காலை பக்கத்தில் படுத்திருப்பவர்மேல் போட்டோ அல்லது கவிழ்ந்தோ படுத்து தூங்கும் பழக்கம் உள்ளவர். படுத்தவுடன் தூங்கிவிடும் புண்ணிவாங்கள். பேசிக்கொண்டு இருக்கையில் தூங்கி விடுவார்கள்.

12) மீன ராசிகாரர்கள் கண்களை பாதி திறந்தபடி தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். தன்னிலை மறந்து உறங்கும் தன்மை உள்ளவர்கள். தன்னைபற்றிய கனவு கண்பர்கள். ஜடம் போல ஆடாமல் அசையாமல் நிமிர்ந்தோ, ஒந்தரித்தோ படுக்கும் பழக்கம் உள்ளவர்கள். தூக்கதில் சுய சிந்தனையுடன் இருப்பார்கள் மற்றவர் தொட்டலோ, சின்ன சப்தம் கேட்டாலோ விழித்துக்கொள்வார்கள்.

கடவுள் மனிதனுக்கு அளித்த வரம் தூக்கம்
தூக்கமே நோயாளியின் மருந்து
அளவான தூக்கம் வளமான வாழ்வு