Date : 28th Feb 2020
Posted By : Admin
அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் – பூபாளம்
அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் – மலையமாருதம், சக்கரவாகம்
சிறுநீரகப் பிரச்னை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி
கடின மனம் இளக, கல்நெஞ்சம் கரைய –
அரிகாம் போதி
மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட –
ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி, சகானா, நீலாம்பரி
மனம் சார்ந்த பிரச்சனை தீர
– அம்சத்வனி, பீம்பிளாஸ்
இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் –
சந்திரக கூன்ஸ்
நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி, ஜகன் மோகினி
பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம் -
அடான
மனதை வசீகரிக்க, மயக்க -
ஆனந்த பைரவி, உசேனி, கரகரப்பிரியா
சோகத்தை சுகமாக்க -
முகாரி , நாதநாமக்கிரியா
பாம்புகளை அடக்குவதற்கு –
அசாவேரி ராகம்
வாயுத்தொல்லை தீர –
ஜெயஜெயந்தி ராகம்
வயிற்றுவலி தீர -
நாஜீவதாரா
இசைக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு:
ஜோதிடத்திற்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு எனக் கூறுகிறார்கள்.
கர்நாடக சங்கீதத்தில் 12 ஸ்வரங்களை 12 ராசிகளோடு இணைத்துப் பார்க்கின்றனர். நவக்கிரகங்களில் சூரியனும் சந்திரனும் ஒரே சீரான வேகத்தில் செல்லும் கிரகங்களாகும் அதேபோல சங்கீதத்தில் ஸட்ஜா மற்றும் பஞ்சம ஸ்வரங்கள் ஒரே சீரான தாளகதியைக் கொண்ட ஸ்வரங்கள் என்று கூறுவதோடு அதைக் கடக சிம்ம ராசிகளோடு இணைக்கின்றனர்.
நாதம் என்றால் ஒலி அதாவது ஒழுங்கு ஒழுங்கற்ற இரண்டும் நாதம் தான் ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலியின் காரணமாக மனதிற்குப் பலவித உணர்ச்சிகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது, நாதம் தான் உலக உயிர்களும் தோன்ற காரணமாக உள்ளது என்பது வேத தத்துவம் அதனால் தான் இறைவனுக்கு விஸ்வநாதன், ராமநாதன் என்றெல்லாம் பெயர்கள் சூட்ட பெற்றன மீதியுள்ள பத்து ஸ்வரங்களை இரண்டிரண்டாக பிரித்து ஐந்து குழுக்களாக சவ்விய அபசவ்விய முறையில் தொகுத்து ஐந்து கிரகங்களோடு பின்வருமாறு ஒப்பிடுகின்றனர்
கன்னி ராசி - சுத்த ரிஷபம்
துலா ராசி - சதுஸ்ருதி ரிஷபம்
விருச்சிக ராசி - சாதாரண காந்தாரம்
தனுசு ராசி - அந்தர காந்தாரம்
மிதுன ராசி - காகளி நிஷாதம்
ரிஷபராசி - கைசிக நிஷாதம்
மேஷ ராசி - சதுஸ்ருதி தேவதம்
மீன ராசி - சுத்த தேவதம்
மகர ராசி - சுத்த மத்யமம்
கும்ப ராசி - ப்ரதி மத்யமம்