கிரிவல பயன்கள் எந்தெந்த நாட்களில் என்ன நன்மை
கிரிவல பயன்கள் எந்தெந்த நாட்களில் என்ன நன்மை
பவுர்ணமியன்று அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபடுவது மரபாக இருந்தாலும் கூட, பிறநாட்களிலும் நாம் அந்த மலையை வலம் வந்து வழிபடலாம். வார நாட்களில் கிரிவலம் சுற்றினால் ஏற்படும் பலன்கள்:
ஞாயிறு: மரணத்துக்குப் பின் சிவபதம் (கைலாயம்) சேர்தல்
திங்கள்: செல்வவளம் கிடைத்தல்
செவ்வாய்: வறுமை, கடன் நீங்குதல்
புதன்: கல்வியில் வளம் (பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளுடன் புதன்கிழமையில் வலம் வரலாம்)
வியாழன்:தியானம், யோகா முதலியவற்றில் பற்று ஏற்படுதல்
வெள்ளி: விஷ்ணுலோகமான வைகுண்டம் அடைதல்
சனி: கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பம் நீங்குதல்
அமாவாசை:சிவனின் பரிபூரண அருள், மன நிம்மதி கிடைக்கும் குழந்தை பெறுவதில் குறையுள்ள தம்பதிகள் தொடர்ந்து 48 நாட்கள் தம்பதி சமேதராக கிரிவலம் வந்தால் மக்கட்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகேசனை வேண்டிக்கொண்டு மனதார கிரிவலம் வந்தால் நினைத்தது ஈடேரும் என்கின்றனர் முயற்சித்து பாருங்களேன்.